ரூ. 20 ஆயிரம் பணத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர்

சேலம் மாவட்டம் தீவெட்டிப்பட்டியை சேர்ந்த தம்பதி ஒருவர் 4ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால், அவரை ரூ. 20 ஆயிரம் காசுக்கு விற்ற தம்பதியைக் கிராம நிர்வாக அலுவலர் எச்சரித்தார்.


சேலம் மாவட்டம் தீவெட்டிப்பட்டியை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. இவர்களுக்குச் சமீபத்தில் 4ஆவதாக குழந்தை ஒன்று பிறந்தது. அது பெண் குழந்தை.

 

பெண் குழந்தை என்பதால் அவரை வளர்க்கச் சிரமப்பட வேண்டும் பெற்றோர் கருதியுள்ளனர். இதனால், அந்த குழந்தையைப் பணத்திற்கு விற்று விடலாம் என முடிவு செய்கின்றனர்.

 

அதன்படி சேலம் மாவட்டஹ்த்டில் டேனிஷ்பேட்டையை சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர் என்பதை அறிந்து, அவர்களைத் தொடர்பு கொண்டு பெண் குழந்தையை ரூ. 20 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர்.