அகமதாபாத்:
இரு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரோவின் சந்திரயான், ககன்யான் திட்டங்களை பாராட்டினார். இன்றும் நாளையும் இந்திய மண்ணில் தங்கவுள்ள டொனால்ட் டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு சென்றார். அங்கு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.